சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்களில் நடிக்கும் போதே அதைப் பார்த்த மக்கள் இவரெல்லாம் இதில் நடிக்காவிட்டால் என்ன. இதற்கு பதிலாக வேறு யாரும் நடித்தால் கூட இவருடைய கடையை தேடி போவார்கள் என்று பல விமர்சனங்களை வைத்தார்கள். ஆனாலும் இதை கேட்டு கொஞ்சம் கூட சோர்ந்து போகவில்லை.
அதற்கு பதிலாக என்னை பற்றி கேலியும் கிண்டலும் செய்த அவர்களுக்கு முன் நான் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து ஹீரோவாக வருவேன் என்று நடித்த படம் தான் தி லெஜன்ட். இப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. பொதுவாகவே எல்லோரும் சினிமாவிற்கு இளம் வயதில் இருந்து வந்து வயதானாலும் நடித்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அண்ணாச்சி மட்டும் அவருடைய 50வது வயதில் ஹீரோவாக அடி எடுத்து வைத்தார்.
ஆனாலும் இவருக்கு ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு தமிழில் எந்த நடிகைக்கும் விருப்பமில்லை. அதனால் இவர் பாலிவுட் நடிகையான உலக அழகியான ஊர்வசி ரவுட்டேலா என்ற நடிகையை இவருடைய படத்திற்கு களம் இறக்கினார். பொதுவாக எந்த நடிகையும் 50 வயது நடிகருக்கு ஜோடி சேர விருப்பப்பட மாட்டார்கள். அதிலும் அந்த ஹீரோவின் முதல் படம் என்பதால் சொல்லவே தேவையில்லை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்.
ஆனால் அந்த சமயத்தில் பாலிவுட் நடிகை நடிப்பதற்கு சம்மதித்த காரணமே இவர் அளவு கடந்து கொட்டிக் கொடுத்த பணம் தான். ஏனென்றால் யாருமே இவருடன் நடிக்க விருப்பம் இல்லாத நேரத்தில் இந்த நடிகை அதுவும் உலக அழகியாக இருந்தவர் நடிக்கிறார் என்ற சந்தோஷத்திலேயே எவ்வளவு கொடுத்தாலும் தகும் என்று பணத்தை வாரி வழங்கி இருக்கிறார்.
அதனால் தான் தற்போது இந்தி கவர்ச்சி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுட்டேலா மும்பையில் மற்ற நடிகைகள் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பங்களாவை வாங்கி இருக்கிறார். இதுதான் தற்போது அங்கே அனைவரும் பேசும் பொருளாக இருக்கிறது. ஏனென்றால் பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் கூட 100 அல்லது 120 கோடி மதிப்பில் தான் வீடுகள் வாங்கியுள்ளார்கள்.
அப்படி இருக்கையில் ஒரு சில குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ள இவரால் எப்படி 190 கோடியில், அதுவும் நகரத்தின் மையப் பகுதியில் நான்கு மாடி பங்களாவை வாங்க முடியும் என்று அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்து இருக்கிறது. அதுதான் அண்ணாச்சி இருக்க இவருக்கு என்ன பயம். இதெல்லாம் அண்ணாச்சியின் சித்து விளையாட்டாக தான் இருக்கும். இந்த விஷயம் மட்டும் தமிழ் நடிகைகளுக்கு தெரிஞ்சுச்சு என்றால் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க வருவார்கள். இனிமேல் அண்ணாச்சி காட்டில் அடைமழை தான்.