திறமையும், அழகும் இருந்தும் கழட்டி விடப்பட்ட மணிரத்னம் பட நடிகை

சாதாரணமாக அழகும், திறமையும் இருந்தால் சினிமாவில் கொடிகட்டி பறக்கலாம். ஆனால் இந்த இரண்டும் இருந்து அதிர்ஷ்டம் இல்லாததால் தற்போது வரை போராடி வருகிறார் ஒரு நடிகை. அவ்வளவு சுலபமாக யாருக்கும் மணிரத்தினம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திடாது.

ஆனால் இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் முதல் படமே மணிரத்தினம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது கெட்ட நேரம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்பு இந்த நடிகை நடித்த தமிழ் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு அவ்வளவாக மார்க்கெட் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஹிந்தி படங்களில் அதிக நாட்டம் செலுத்தி வருகிறார். அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி.

இப்படம் தோல்வியை சந்திக்க மணிரத்தினத்தின் அடுத்த படமான செக்க சிவந்த வானம் படத்தில் அதிதி ராவ் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சைக்கோ, ஹே சினாமிகா போன்ற தமிழ் படங்களில் நடித்த அதிதி ராவுக்கு ஒரு படம் கூட வெற்றியை கொடுக்கவில்லை.

அதிதி ராவ் நடித்த எல்லா படமும் ஃபெயிலியர் என்பதால் அழகு, திறமை அனைத்தும் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிதி ராவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயங்குகிறார்கள். இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு பறிபோகிறது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை அதிதி வெளியிட்டு வருகிறார். இதனால் தமிழ் ரசிகர்களும் அவரது இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு மேக்கப் டிப்ஸ்களையும் அதிதி ராவ் கூறிவருகிறார்.