பல கோடிக்கு கார்களை மட்டுமே குவித்து வைத்திருக்கும் சூர்யா.. ஒட்டு மொத்த சொத்து மதிப்பு

Actor Suriya Net Worth: தமிழ் சினிமாவின் ‘நடிப்பின் நாயகன்’ என கொண்டாடப்படும் சூர்யா நடிகராக மட்டுமல்ல சமூக அக்கறை கொண்டவராகவும் இருப்பதால் அவருக்கென்று  தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால் இவருடைய 48வது பிறந்த நாளை நேற்று அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

இது மட்டுமல்ல கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவும் வெளியாகி  இணையத்தை ரணகளம் செய்தது. இந்த நிலையில் சூர்யாவை பற்றிய பல  சுவாரசியமான தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. அதிலும் அவருடைய ஒட்டு மொத்த சொத்து விவரமும் அவர் வைத்திருக்கும் கார் லிஸ்ட்களும் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

தற்போதைக்கு கோலிவுட்டில் இருக்கும்  முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் எல்லாம் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிற நிலையில்  நடிகர் சூர்யா அதிகபட்சமாக 50 கோடி சம்பளத்தை கங்குவா படத்திற்காக வாங்கி இருக்கிறார்.

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை  சினிமாவிலேயே போட வேண்டும் என நினைக்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இவர் தனது 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து, அதில் மற்ற இளம் நடிகர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு சூர்யாவின்  சொத்து மதிப்பு 200 கோடி இருந்த நிலையில், தற்போது 250 கோடியை சம்பாதித்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல சூர்யாவின் மனைவியின் சொந்த ஊரான மும்பையில் சமீபத்தில் தான்  பல கோடி மதிப்புள்ள ஒரு வீடு வாங்கி, ஜோதிகா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடியேறினார்.

சூர்யாவிடம் சொந்தமாக ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உள்ளது. அத்துடன் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள ஆடி Q7, ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் M கிளாஸ் மற்றும் ரூ. 1.2 கோடி மதிப்புடைய ஜாகுவார் XJ L போன்ற கார்களும் உள்ளன.