பிக் பாஸ் விக்ரமன் குறித்து வெடித்த சர்ச்சை.. விளக்கம் கொடுத்த மனைவி

Bigg Boss Vikraman : விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டவர் தான் விக்ரமன். இந்த நிகழ்ச்சியில் இவரது கருத்துக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அசீம் முதலிடத்தை தட்டி செல்ல இரண்டாம் இடம்தான் விக்ரமனுக்கு கிடைத்தது. மேலும் கடந்த வருடம் விக்ரமன் ப்ரீத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் விக்ரமன் பற்றி இணையத்தில் அதிக ட்ரோல் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன் விக்ரமன் பெண் வேடமிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஆண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி இணையத்தில் பூதாகரமாக வெடித்தது.

பிக்பாஸ் விக்ரமன் மனைவி கொடுத்த விளக்கம்

இந்த சூழலில் விக்ரமனின் மனைவி பிரீத்தி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்கள் இடம் பேட்டி கொடுத்திருக்கிறார். விக்ரமன் பெண் வேடமிட்டது ஒரு சூட்டுக்காக தான். அந்த வீடியோவை நான் தான் எடுக்க சொன்னேன்.

இதை வேறு மாதிரியாக சித்தரித்து பலர் அவதூறு பரப்புகின்றனர். மேலும் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இப்போது தேவை இல்லாமல் அந்த வீடியோவை வைத்து சர்ச்சையாக்கி உள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ள நிலையில் இது குறித்து விசாரிப்பதாக போலீசார் கூறியுள்ளதாக விக்ரமின் மனைவி பிரீத்தி பேட்டி கொடுத்திருக்கிறார். இப்போது இணையத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நல்லதை விட கெட்டது அதிகமாக பரவி வருகிறது.

Leave a Comment