பகத் பாசில்-க்கு அடித்த ஜாக்பாட்.. புஷ்பா 2 படத்தில் ஜெட் வேகத்தில் ஏறிய சம்பளம்

Actor Fahath Fasil: ஒரு நேரத்தில் பகத் பாசிலின் நடிப்பை கேலியும் கிண்டலுமாக பார்த்து அவரை ஒதுக்கியது திரையுலகம். ஆனால் தற்போது இவர் எந்த படத்தில் எல்லாம் நடிக்கிறாரோ, அந்தப் படத்தை தேடித்தேடி பார்க்கும் நிலமை வந்துவிட்டது. அந்த அளவிற்கு தற்போது அனைவருக்கும் ஃபேவரிட் நடிகராக வந்து விட்டார்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், எப்பொழுது விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமீராக அறிமுகமானாரோ அப்பொழுதே இவருடைய நடிப்புக்கு அனைவரும் மயங்கி விட்டார்கள். இதனை அடுத்து சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

அத்துடன் இவர்தான் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் கதைக்கு ஏற்ற மாதிரி தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு படத்திற்கும் தன்னை மெருகேற்றி நடிக்க கூடிய திறமையான நடிகர். அதனால் தற்போது இவருடைய மார்க்கெட் ரேட் சினிமாவில் கூடிக் கொண்டே வருகிறது.

மேலும் தற்போது வரப் போகிற படங்களில் இவருடைய கதாபாத்திரம் எப்படியாவது கொண்டு வந்த விட வேண்டும் என்று பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை தேடிக் போகிறார்கள். அந்த வகையில் புஷ்பா படத்தில் அதிரடியான நடிப்பை தொடர்ந்து, புஷ்பா 2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக இவர் பெற்ற சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை வாங்காத சம்பளத்தை கோடிக்கணக்கில் பெற்றிருக்கிறார். அதாவது இப்படத்தில் சம்பளம் 6 கோடி வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது ஒரு விதத்தில் இவருடைய வளர்ச்சிக்கு கிடைத்த ஜாக்பாட். ஆனால் ரசிகர்கள் அனைவரும் இவர் நடிப்புக்கு மிகவும் கம்மியான சம்பளம் தான் என்று கூறி வருகிறார்கள்.

அத்துடன் நடிக்கவே தெரியாத சில முன்னணி நடிகர்களின் சம்பளத்தை ஒப்பிட்டு அவர்களை விட பகத் பாசிலின் நடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இது இவருக்கு கம்மியான சம்பளம் தான் என்று அவருடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இனிவரும் படங்களில் கண்டிப்பாக இவருடைய ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி சம்பளம் இன்னும் அதிகரிக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.