17 வயது சிறிய பெண்ணுடன் ஏற்பட்ட காதல்.. 3வது திருமணத்திற்காக நடிப்புக்கு குட்பாய் சொன்ன நடிகர்

உலக அளவில் பிரபலமாக இருப்பவர்தான் அந்த நடிகர். எந்த அளவுக்கு அவருக்கு பேரும், புகழும் இருக்கிறதோ அதே அளவுக்கு சர்ச்சைகளும் இருக்கிறது. இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் நடிகருக்கு இருக்கும் மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. இருந்தாலும் கூட அவர் இப்போது தன்னுடைய ஓய்வை அறிவித்து பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் சமீபத்தில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தது ஹிந்தி திரையுலகையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தன்னுடைய குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் நேரம் செலவிடுவதற்காக அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

இது பற்றி கூறிய அவர் நடிப்பை விட்டாலும் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தயாரித்து வருவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய குழந்தைகளுடன் என்னால் மகிழ்ச்சியாக நேரம் செலவிட முடியவில்லை. அதனால் தான் இப்படி ஒரு முடிவு என்றும் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்வி தான் அவரை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்துள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் வெளியான லால் சிங் சதா திரைப்படத்தை அமீர்கான் தயாரித்து நடித்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை. அது மட்டுமில்லாமல் அமீர்கானின் ரசிகர்களே அந்த திரைப்படத்தை எதிர்த்தது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல கோடி நஷ்டம் அடைந்த அமீர்கான் தற்போது நடிப்பையே விட்டுவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால் இது ஒரு காரணமாக இருந்தாலும் இதற்கு பின்னணியில் வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.

அதாவது அடுத்தடுத்து திருமணம், விவாகரத்து என்று பரபரப்பை கிளப்பி வரும் அமீர்கான் தற்போது மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டாராம். தன்னுடைய இரண்டாவது மனைவியை கடந்த வருடம் விவாகரத்து செய்த இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை இளம் நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அதைத்தொடர்ந்து அவர் இப்போது தன்னைவிட 17 வயது குறைந்த நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நடிகை வேறு யாருமல்ல லால் சிங் சதா திரைப்படத்தில் அமீர்கானுக்கு அம்மாவாக நடித்த மோனிகா சிங் தான். 40 வயதாகும் இவர் தற்போது அமீர்கானுடன் நெருங்கி பழகி வருகிறாராம். விரைவில் இவர்கள் இருவரும் திருமணத்தில் இணைவார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் அடித்து கூறுகின்றனர். இதனால்தான் அமீர் கான் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் ஹிந்தி திரை உலகில் சலசலக்கப்பட்டு வருகிறது.