விஜயுடன் மூன்றாவது முறையாக இணையும் டெரர் நடிகர்.. நம்பமுடியாத கூட்டணியில் தளபதி 66

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் தளபதி 66. இப்படத்தைப் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் காதல், சென்டிமெண்ட் என குடும்ப கதை அம்சங்களைக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ளது.

மேலும் விஜய் சமீபகாலமாக ஆக்சன் படங்களிலேயே நடித்து வருகிறார். ஆரம்பத்தில் விஜய்க்கு சென்டிமென்ட் படங்கள் கை கொடுத்தாலும் தற்போது ஆக்ஷன் படங்களில் நடித்த ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். தற்போது மீண்டும் விஜய்யின் சென்டிமென்ட் படம் ரசிகர்களை கவருமா என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம் மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்போது இளைய திலகம் பிரபுவும் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தியை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விஜய்யின் புலி மற்றும் தெறி படத்தில் பிரபு நடித்து இருந்தார்.

தற்போது மீண்டும் விஜயுடன் இணைய உள்ளார். பிரபு குடும்ப சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்க கூடியவர். இந்நிலையில் இப்படத்தில் பிரபு இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விஜய் ரசிகர்களுக்கே ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. ஆகையால் தளபதி 66 படத்தில் அதை எப்படியாவது ஈடு செய்து விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்த படக்குழு முயற்சி செய்து வருகிறது. மேலும் விஜய்யின் பிறந்த நாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக் உடன் டைட்டில் வெளியாகயுள்ளது.

இவ்வாறு தளபதி 66 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திவருகிறது. மேலும் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீண்டும் தளபதி 66 படக்குழு ஹைதராபாத்திற்கு சென்று படப்பிடிப்பு நடந்து வருகிறது.