அஜித்திற்கு ரூட் விட்ட பிரபல நடிகை.. வெட்கத்துடன் ஓடிய பைங்கிளி

கடந்த பிப்ரவரி மாதம் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு அஜித்தின்  61-வது படத்தை மீண்டும் எச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக லைக்கா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா நாக், தன்னுடைய 11 வது வயதிலேயே அஜித்துக்கு ப்ரொபோஸ் பண்ணேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இவர் காதல் கவிதை, நீ வருவாய் என உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

அதன் பிறகு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவிற்கு தோழியாக நடித்து அனைவரின் கவனம் பெற்றார். அதன் பின் 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக நடித்து, மேலும் பிரபலம் அடைந்தார்.

இருப்பினும் சரண்யாவிற்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிப் படங்கள் எதுவும் அமையாததால், இப்பொழுதும் சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் சரண்யா பேட்டி ஒன்றில் ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, அஜித் நடிப்பில் வெளியான ‘நீ வருவாய் என’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சரண்யா நடித்துள்ளார்.

அப்போது ஒருநாள் அஜித் படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார். அவரை பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என சரண்யா நாக் கேட்டுள்ளார். அதற்கு அஜித், எதுவும் பேசாமல் சிரித்தாராம். அப்படின்னா சீக்கிரமா நான் வளர்ந்துர்றேன் என அஜித்திடம் சரண்யா சொல்லிட்டு வெட்கத்துடன் ஓடி விட்டாராம்.

இவ்வாறு ‘நீ வருவாய் என’ என்ற படத்திற்கான படப்பிடிப்புத் தளத்தில் சிறுவயதில் தன்னுடைய காதலை தல அஜித்திடம் வெளிப்படுத்தியது இன்றும் மறக்க முடியாத நிகழ்வு என சரண்யா நாக் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.