AK61-ல் அஜித்தை அழகாக காமிக்க போகும் கேமராமேன்.. தல கை காமிச்சா சரியாத்தான் இருக்கும்

நடிகர் அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா பரவலின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து படம் எப்போது வெளியாகும் என்று தொடர் கேள்விகளை எழுப்பி வந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஹெச் வினோத், அஜித்துடன் மூன்றாவது முறையாக இணையும் ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

அஜித்தின் முந்தைய இரண்டு படங்களான நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் பாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தில் இணைய இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கேமராமேனாக பணியாற்றுகிறார். இவர் ஏற்கனவே அஜித்தின் கிரீடம், நேர் கொண்ட பார்வை, பில்லா போன்ற திரைப்படங்களுக்கு கேமராமேனாக பணியாற்றியுள்ளார்.

அதிலும் பில்லா திரைப்படத்தில் அஜித்தை மிகவும் ஸ்டைலாக, அழகாக காட்டிய பெருமை இவருக்கு உண்டு. அதே போன்று இந்த ஏ கே 61 திரைப்படத்திலும் அஜித்தை மிகவும் இளமையாக, அழகாக அவர் காட்ட இருக்கிறாராம்.

இந்த செய்தியால் அஜித்தின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த திரைப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் படத்தினை விரைந்து முடிப்பதற்கான பணியில் படக்குழு தீவிரமாக இருக்கிறது.