இரண்டு வருடம் நீடிப்பதே கடினம்.. தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட காமெடி நடிகர்

Comedy Actors: இப்போது காமெடி நடிகர்களுக்கு ஹீரோவாக நடிக்க ஆசை வருகிறது. காரணம் சந்தானம், வடிவேலு, சூரி போன்ற நடிகர்கள் இப்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சூரியின் விடுதலை படத்தில் நடித்த பிறகு அவருக்கு கதாநாயகனாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக பெரிய அளவில் செல்லலாம். ஆனால் பிரபல நடிகர் ஒருவர் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சினிமாவில் நீடிப்பதே இன்னும் இரண்டு வருடங்கள் தான் இருக்கும் கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு அலப்பறை செய்து வருகிறார்.

அதாவது வடிவேலு தனக்கென்று ஒரு பாடி லாங்குவேஜ் வைத்து காமெடி செய்யக்கூடியவர். தனக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு நகைச்சுவை செய்து வந்தார். ஆனால் அந்த குழுவில் நான் மட்டும் வளர வேண்டும் வேறு யாரும் பெயரை வாங்கி விடக்கூடாது என வடிவேலு நினைப்பாராம்.

இதை அவரது குழுவில் உள்ள பலர் பேட்டியில் சொல்லி உள்ளனர். ஆனால் இப்போது படங்களில் வடிவேலுவின் காமெடி சுத்தமாக நன்றாக இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்றால் அவருடன் குழு இல்லாத காரணத்தினால் அவருடைய காமெடிகள் எடுபடவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் இப்போது யோகி பாபு போன்ற நடிகர்களின் காமெடி ரசிகர்களால் பெரிய அளவில் கவரப்படுகிறது. இதனால் டாப் ஹீரோக்களின் படங்களில் யோகி பாபு தான் நடித்து வருகிறார். மேலும் பெரிய ஹீரோக்கள் இப்போது வடிவேலுவை கண்டு கொள்ளவே இல்லை.

எனவே இன்னும் இரண்டு வருடங்கள் வடிவேலு சினிமாவை நீடிப்பதே கடினம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு தான் அழிந்தது பத்தாது என்று தன்னை நம்பி உள்ளவர்களையும் வடிவேலு அளித்துவிட்டார். மீமீஸ் கிரீரியேட்டிஸ் இன் கடவுளாக இருந்த வடிவேலுக்கு இப்போது இந்த நிலைமையா என பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.