சூர்யாவுக்கு வரும் புதிய பிரச்சனை.. மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் இயக்குனர்

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது பாலா இயக்கி கொண்டிருக்கும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி முதன் முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

இதன் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. மேலும் கடற்கரை பகுதிகளில் நடத்தப்படும் இந்த படப்பிடிப்பு தோராயமாக 50 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா இந்த படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது சிறுத்தை சிவா சூர்யாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம். அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா சில மாதங்கள் செலவழித்து ஒரு பக்காவான கதையை தயார் செய்து வைத்துள்ளாராம்.

அந்தக் கதையை அவர் சமீபத்தில் சூர்யாவிடம் கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படி எல்லாம் தயாராக இருக்கும் நிலையில் படம் தொடங்கும் தேதி மட்டும் இன்னும் முடிவாகாமல் இருக்கிறது.

பொதுவாக பாலாவின் திரைப்படம் சொன்ன தேதியை விட சில பல நாட்கள் இழுத்து விடும். அதனால் தற்போது ஆரம்பிக்கப்பட இருக்கும் அந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு குறித்த தேதியில் முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.

ஒருவேளை காட்சிகள் திருப்திகரமாக இல்லை என்றால் பாலா மீண்டும் அந்த காட்சிகளை படமாக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் சூர்யா அந்தத் திரைப்படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு வந்த பிறகு தான் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும். அதற்காக சிறுத்தை சிவாவும் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.