மொத்தமும் ஒரே நிமிஷத்துல போச்சு.. மைனா நந்தினி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Myna Nandhini : விஜய் டிவியில் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நந்தினி. இந்த தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் அவருக்கு மைனா நந்தினி என்ற பெயரை அடையாளமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து வந்தார். அவரது முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில் இரண்டாவதாக சின்னத்திரை நடிகர் யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த சூழலில் சின்னத்திரையில் இருந்த விலகி இருக்கும் மைனா நந்தினி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அது தவிர சில குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மைனா நந்தினி வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

அதாவது ஒரே நிமிஷத்தில் மொத்தத்தையும் தொலைத்து விட்டதாக அவரும் அவரது கணவரும் பேசியுள்ளனர். அதாவது ஒரு வெப் தொடருக்காக பெரிய அளவில் செலவு செய்து இலங்கை சென்று படம் எடுத்த வந்துள்ளனர்.

அங்கு அலைந்து திரிந்து பல லொகேஷன் சென்று ஒவ்வொரு இடமாக காட்சிகளை படம் பிடித்து ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்துள்ளனர். மேலும் அதை இந்தியாவுக்கும் எடுத்து வந்துள்ளனர்.

அதில் கிட்டத்தட்ட 800 ஜிபி புவட்டேஜை படமாக்கி கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் இந்தியாவுக்கு கொண்டு வரும்போது தவறுதலாக டிஸ்க் கீழே விழுந்து விட்டதாம். இங்கு வந்து அது சிஸ்டத்தில் போட்டு பார்க்கும்போது ஹார்ட் டிஸ்க் வேலை செய்யவில்லையாம்.

இதனால் இவ்வளவு நாள் படம் பிடித்த உழைப்பு மற்றும் பணம் எல்லாமே வீணாகப் போய்விட்டது என வேதனையுடன் தனது யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார்கள். ஒரே நிமிஷத்தில் இப்போது ஜீரோவில் நிற்கிறோம் என்று வருத்தத்துடன் பேசியிருந்தனர்.

Leave a Comment