45 வயதில் விக்ரம் பட நடிகை செய்த வேலை.. 10 வயது இளையவருடன் காட்டும் நெருக்கம்

Actor Vikram: பொதுவாக சினிமாவில் உள்ள நடிகைகளை பற்றி கிசுகிசுக்கள் வருகிறது. ஆனால் இப்போது விக்ரம் பட நடிகையை பற்றி புகைப்படத்துடன் ஒரு செய்தி அம்பலமாக இருக்கிறது. அதாவது 45 வயதில் தன்னைவிட பத்து வயது இளையவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

விக்ரம் பல வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த வகையில் மனவளர்ச்சி குன்றியவராக அபாரமான நடிப்பை தெய்வத்திருமகள் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் அமலா பால், எம் எஸ் பாஸ்கர், சாரா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

இதில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தவர் சுரேகா வாணி. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன் படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி என பல படங்கள் நடித்து வந்தார்.

இந்நிலையில் 45 வயதாகும் இவர் தன்னை விட பத்து வயது இளையவருடன் நைட் பார்ட்டி சென்று இருக்கிறார். அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இருக்கிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இப்போது அவருக்கு திருமண வயதில் ஒரு பெண் உள்ளார். இந்த சூழலில் இப்படி ஒரு புகைப்படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் சுரேகா வாணியின் பாய் ஃப்ரெண்ட் என்று கூறப்படுகிறது.

தனது மகளின் சம்மதத்துடன் விரைவில் சுரேகா வாணி திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இப்போது சுரேகா வாணியின் முத்த புகைப்படம் தான் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இளம் வயதில் பெண் இருக்கும்போது இப்படி செய்வது நியாயமா என விமர்சித்து வருகிறார்கள்.