என் குழந்தை இங்க தான் பிறக்கும்.. குண்டைத் தூக்கிப் போட்ட முரட்டு சிங்கிள் விஷால்

Actor Vishal: நடிகர் விஷால் இன்று 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து நல்ல நிலையில் இருந்த விஷால் சில சர்ச்சைகளில் பின்னடைவை சந்தித்தார். இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியான படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

மேலும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை எடுத்தார். அப்போது விஷால் மற்றும் மிஸ்கின் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் தனது பிறந்த நாளை முன்னிட்டு விஷால் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று தன்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறார். அப்போது செய்தியாளர்கள் விஷாலை சூழ்ந்து கொண்டு நிறைய கேள்விகள் எழுப்பியிருந்தனர்.

அப்போது பல இடங்களில் கவர்மெண்ட் மருத்துவமனை பலரும் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி விஷாலிடம் கேட்டிருந்தனர். இதில் ஒருவர் மட்டும் குறை கூற முடியாது. எல்லோருமே ஒன்றை செய்யும்போது தான் அதன் வளர்ச்சி மக்களை அடையும். வருங்காலத்தில் எனக்கு குழந்தை பிறந்தால் அரசாங்க மருத்துவமனையில் தான் பிரசவம் பார்ப்பேன் என்று விஷால் வாக்கு கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் என்று தேர்தலில் ஜெயித்த போது விஷால் வாக்கு கொடுத்தார். அதன்படி தற்போது வரை நடிகர் சங்கம் கட்டிடமும் கட்டிய பாடு இல்லை, விஷாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 46 வயது வரை முரட்டு சிங்கிளாக இருக்கும் விஷால் இவ்வாறு கூறியிருப்பது இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இனி எப்போது விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் அவருடைய ரசிகர்கள் விஷால் அடுத்த வருடம் தனது மனைவியுடன் தான் பிறந்தநாளை கொண்டாடுவார் என்று வாழ்த்து கூறி வருகிறார்கள். இதுகுறித்து விஷால் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.