இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் . இப்படத்தின் முதல் பாகம் வெளியானதிலிருந்து தற்போது 9 ஆவது பாகம் வரைக்கும் ரசிகர்களிடம் தொடர்ந்து ஆதரவு பெற்று வருகிறது.
அதுமட்டுமில்லாமல் படத்தில் வரும் ஒவ்வொரு கார் ஓட்டும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து படத்திற்கு படம் வித்தியாசமான கார்களையும் விசித்திரமான சண்டைக் காட்சிகளை வைத்து அசத்தி இருந்தனர்.
இந்திய ரசிகர்களை பொருத்தவரை எந்த படமாக இருந்தாலும் சரி எந்த கதையாக இருந்தாலும் சரி அவருக்கு பிடித்து விட்டால் தொடர்ந்து ஆதரவு கொடுப்பார்கள் அப்படி காரை மையமாக வைத்து உருவான ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த வின் டீசல் மற்றும் ராக் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து படக்குழு அதிகப்படியான காட்சிகளை வைத்தது.
ஆனால் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் மிகவும் கடுமையான கதாபாத்திரம் என்பதால் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் நடிகரும் தயாரிப்பாளருமான வின் டீசல் ராக்கிடம் கடுமையாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைப்பற்றி வின் டீசல்லிடம் கேட்டபோது ராக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கடுமையான கதாபாத்திரம் மேலும் ஒரு நடிகர்களிடம் இருந்து நடைபெற நான் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் நடந்து கொள்வேன் என கூறியுள்ளார். மேலும் இனி வரும் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் படங்களில் டிவைன் ஜான்சன் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.