Fight Club Movie Collection Report: லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள முதல் திரைப்படமான ஃபைட் கிளப் படத்தின் ஒரு வார வசூல் விவரத்தை இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லோகேஷின் உதவி இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், இயக்குனரும் நடிகருமான உறியடி பிரபலம் விஜய்குமார் நடிப்பில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஃபைட் கிளப் திரைப்படம் வெளியானது.
முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்தது. இருப்பினும் ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தமாக ஃபைட் கிளப் திரைப்படம் 5.75 கோடியை வசூலித்துள்ளதாக பட குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் போதைப்பொருள் எந்த அளவிற்கு இளைஞர்கள் வாழ்க்கையில் கேள்விக்குறியாக்குகிறது, இதன் நடுவே அரசியல்வாதிகளின் விளையாட்டு என பக்கா ஆக்சன் கம் பேக் மூவியாக ஃபைட் கிளப் படத்தை உருவாக்கினர்.
ஃபைட் கிளப் படத்தின் ஒரு வார வசூல் ரிப்போர்ட்
இந்த படம் ஆறு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் முதல் நாளில் 1 கோடி வசூலை பெற்றது. அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் அதிகரிக்கும் என நினைத்த நிலையில், படிப்படியாக குறைந்தது கடைசியில் ஒரு வாரத்தில் போட்ட காசை எடுத்து விட்டேன் என்பதை காட்டும் விதத்தில் லோகேஷ் ஒரு வார வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளார்.
படம் முழுக்க கஞ்சா புகையும், மது பாட்டில்களும் தாராளமாக புழங்குவது ஒரு கட்டத்தில் எரிச்சலை தருகிறது. ஆக்சன் காட்சிகளுக்கும் கணக்கு வழக்கு இல்லாமல் காட்டப்பட்டது. ‘வடசென்னை என்றால் வெட்டு குத்து ரத்தம் தான்’ என்பது போல் காட்டப்படும் படங்களில் இப்போது ஃபைட் கிளப் படமும் சேர்ந்துடுச்சு. இந்தப் படத்தில் ஒரு சில விஷயத்தை குறைத்து இருந்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பூர்த்தி அடைந்த வசூலும் இரண்டு மடங்காக வாய்ப்பு இருந்திருக்கும்.