பெயிட் ரிவ்யூ செய்யும் சினிமா விமர்சகர்கள்.. சர்ச்சையில் மாட்டிய பிரசாந்த்

Prashant Rangasamy : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சினிமா விமர்சகர்கள் மற்றும் சினிமா இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அதாவது இப்போது திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகிறது. ஆனால் முதலில் சினிமா விமர்சகர்களின் விமர்சனத்தை பார்த்து விட்டு தான் பலரும் தியேட்டருக்கு செல்கிறார்கள்.

ஏனென்றால் நாங்கள் கொடுக்கும் பணம் ஒர்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விமர்சனங்களை பார்த்துவிட்டு செல்கிறார்கள். ஆனால் இதில் சில சினிமா விமர்சகர்கள் பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் செய்வதாக கூறப்பட்டு வந்தது.

அதாவது ப்ளூ சட்டை மாறன் போன்ற சில விமர்சகர்களுக்கு அதிக சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து படத்தை நன்றாக இருக்கும்படி கூற சொல்கின்றனர்.

காசு வாங்கிக் கொண்ட விமர்சனம் செய்யும் சினிமா விமர்சகர்கள்

இப்படி இருக்கும் சூழலில் சினிமா பையன் என்ற யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்து வருகிறார் பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா. இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெயிட் ரிவ்யூஸ் இங்கு இல்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் உடனே அவர் பக்கத்தில் பிரசாந்த் ரங்கசாமி அமர்ந்திருந்த நிலையில் இவர்தான் அதிகமாக பெயிட் ரிவ்யூ பண்ணுகிறார் என்று கூறிவிட்டார். அப்படி என்றால் பெரும்பாலான விமர்சகர்கள் திரை மறைவில் பணம் வாங்கிக் கொண்டு தான் விமர்சனகள் செய்கிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சமீபத்தில் கமலின் தக லைஃப் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்திற்கு மோசமான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். படம் வெளியான முதல் நாளே மோசமான விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.