இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்.. தியேட்டரில் பெருத்த அடி வாங்கிய போலா சங்கர்

September 15th On Ott Release Movies: இந்த மாதம் திரையரங்குகளிலேயே கிட்டத்தட்ட 30 படங்கள் வெளியாகும் நிலையில் ஓடிடியிலும் அதிக படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் மார்க் ஆண்டனி, சந்திரமுகி 2 போன்ற பெரிய நடிகர்களின் படங்களும் இந்த மாதம் திரையரங்குகளுக்கு வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான ஜவான் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் கூட்ட நெரிசலில் தியேட்டரில் படம் பார்ப்பதை காட்டிலும் வீட்டிலேயே ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விருப்பம் காட்டுகின்றனர். அதன்படி செப்டம்பர் 15ஆம் தேதி ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகிறது என்பதை இப்போது பார்க்கலாம். வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி என்ற படம் வெளியாகி இருந்தது.

Also Read : ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

அர்ஜுன் தாஸ், துசாரா விஜயன், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் இப்போது ஆஹா மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அடுத்ததாக மைத்திரி என்ற படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் 18 பிளஸ் என்ற படம் வெளியாகிறது.

மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்துடன் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் தான் போலா சங்கர். திரையரங்குகளில் இந்த படம் காற்று வாங்கிய நிலையில் வசூலில் பெருத்த அடி வாங்கி இருந்தது.

Also Read : மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் இதுதானாம்.. பொம்பள சோக்குக்கு தயாராகும் அனகோண்டா ஹீரோ

இப்போது போலா சங்கர் படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 15 வெளியாகிறது. மேலும் இதே தளத்தில் ராமபானம் என்ற தெலுங்கு படம் ஒளிபரப்புகிறது. இது தவிர ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களும் நிறைய வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸில் தர்ஸ்டே விண்டோஸ் மற்றும் மிஸ்டர் எஜுகேஷன் ஆகிய வெப் சீரிஸ் வர இருக்கிறது. ஆகையால் இந்த வாரம் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகுவதால் ரசிகர்களுக்கு திருவிழா போல தான் இருக்க உள்ளது. மேலும் அடுத்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை விரைவில் பார்க்கலாம்.

Also Read : ரஜினிக்கும் , சிரஞ்சீவிக்கும் மொத்தமா குழிதோண்டிய கீர்த்தி சுரேஷ் , தலையில் துண்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்