ஆர்யா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு இவர் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு திணறி வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளிவந்த கேப்டன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
அது மட்டுமல்லாமல் படத்தின் மொத்த வசூலே ஒரு கோடி ரூபாயை தாண்டவில்லையாம். அதிலும் ஆந்திராவில் இந்தப் படத்திற்கான வசூல் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு படுமோசமாக இருந்திருக்கிறது. அதாவது அங்கு இந்த படத்திற்காக போஸ்டர் ஒட்டிய காசு கூட கைக்கு வரவில்லையாம்.
இப்படி அவருடைய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்க ஆர்யா மனசாட்சியே இல்லாமல் தன்னுடைய சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் கொம்பன் முத்தையாவுடன் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.
பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்திற்காக ஆர்யா 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். இதுதான் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்த ஆர்யா எப்படி சம்பளத்தை உயர்த்தினார் என்று திரையுலகில் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இனிமேல் இவரை தங்கள் படங்களில் புக் செய்யக்கூடாது என்று சில தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். ஏனென்றால் சம்பள விஷயத்தில் ஆர்யா அந்த அளவுக்கு ரொம்பவும் கெடுபிடி காட்டுகிறாராம்.
இதனாலேயே பல இயக்குனர்கள் இவரிடம் கதை சொல்ல பயந்து தலை தெறிக்க ஓடுகிறார்களாம். ஆனாலும் அவர் சம்பள விஷயத்தில் இருந்து இறங்குவதாக இல்லை. ஏனென்றால் தற்போது முத்தையாவுடன் இணையும் அந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.