ஒரு வரலாற்று மிக்க நபரை பற்றி திரைப்படங்கள் மூலமாக வெளிப்படையாக உண்மை கதைகளை அடிப்படையாகக் வைத்து எடுக்கக் கூடியது தான் பயோபிக் திரைப்படம். அந்த வகையில் முதன்முறையாக சினிமாவில் பயோபிக் படங்களில் நடித்தவர் செவாலியே சிவாஜி கணேசன்.
இவர் சினிமாவில் மொத்தம் 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிகர் திலகம் என பெயர் பெற்று இந்த காலத்தில் உள்ள நடிகர்களுக்கும் ஒரு நடிப்பின் முன் உதாரணமாக இருக்கக்கூடியவர் தான் சிவாஜி. 250 மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் இவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு நடிப்பிற்கு பெயர் பெற்றவர்.
அப்படிப்பட்ட அவர் முதன் முதலாக ஒரு வாழ்க்கை வரலாற்று மிக்க படத்தை எடுத்து நடித்தார். அது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் பயோபிக் கலர் திரைப்படம். இந்த படத்தில் அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகவே வாழ்ந்திருப்பார். இன்று வரை வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் மட்டும்தான்.
அந்த அளவிற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் வசனமான ” வரி,வட்டி, கிஸ்தி..யாரை கேட்கிறாய் வரி .. எதற்கு கேட்கிறாய் வரி..வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..உனக்கேன் கட்ட வேண்டும் வரி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே ..” இன்று வரை பிரபலம் அடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து “கப்பலோட்டிய தமிழன், கர்ணன், திருவிளையாடல் போன்ற பயோபிக் படங்களில் தத்துரூபமாக நடித்திருப்பார். இந்த வரிசையில் இப்பொழுது சில நடிகர் நடிகைகள் பயோபிக் எடுத்து நடிப்பது ட்ரெண்டாகி வருகிறது.
சமிபத்தில் வெளிவந்த “தலைவி” என்ற திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கங்கனா ரனாவத் பயோபிக் திரைப்படமாக நடித்திருந்தார். இதற்கு முன் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “மகாநதி” எனும் பயோபிக் படத்தில் நடித்திருக்கிறார். இப்பொழுதும் இது ஒரு ஃபேஷனாக வருவதற்கு முக்கிய காரணம் பயோபிக் திரைப்படத்திற்கு குருவாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.