ரத்த வாடை வீசிய லோகேஷின் ஃபைட் கிளப் தேறியதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Fight Club Collection Report: லோகேஷின் ஃபைட் கிளப் நேற்று மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. உறியடி புகழ் விஜய்குமார் மற்றும் பல புது முகங்கள் நடித்திருந்த அப்படம் ப்ரிவ்யூ ஷோவிலேயே நல்ல விமர்சனங்களை பெற்றது.

சோசியல் மீடியாவிலும் அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று முதல் காட்சி வெளியானதுமே இளைஞர்கள் பட்டாளம் படம் சூப்பர் என கமெண்ட் கொடுத்து வந்தனர். அதனாலேயே படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடுநிலையான சினிமா விமர்சகர்கள் பலரும் படத்தில் வன்முறை அதிகம் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர். உண்மையில் போதை மருந்து, வெட்டு, குத்து என படம் முழுவதும் ரத்த வாடை தான் வீசியது. ஏற்கனவே லோகேஷ் மீது இப்படி ஒரு பிம்பம் இருக்கிறது.

அவர் இயக்கும் படங்களில் எல்லாம் இப்படித்தான் வன்முறை கொட்டிக் கிடக்கும். அந்த பாணி தான் ஃபைட் கிளப்பிலும் இருந்தது. அதிலும் வட சென்னை மக்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என சித்தரித்திருந்த விதமும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

இப்படி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ஃபைட் கிளப் முதல் நாளில் இரண்டு கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. நேற்று கண்ணகி உட்பட எட்டு படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அதிக கவனம் ஈர்த்தது ஃபைட் கிளப் தான். அப்படி பார்த்தால் இந்த கலெக்ஷன் கொஞ்சம் குறைவு தான். ஆனால் வார இறுதி நாளில் இது கொஞ்சம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.