Por Thozhil-Takkar: ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் போட்டி போட்டுக் கொண்டு படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவான போர் தொழில், சித்தார்த்தின் டக்கர் மற்றும் சமுத்திரகனியின் விமானம் படங்கள் வெளியானது.
இதில் ரசிகர் மத்தியில் போர் தொழில் மற்றும் டக்கர் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யன்ஷா கௌசிக் ஆகியோர் நடிப்பில் டக்கர் படம் வெளியாகி இருந்தது. பணம் மட்டும் இருந்தால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நினைக்கும் இளைஞனின் வாழ்க்கையை வைத்து டக்கர் படம் எடுக்கப்பட்டிருந்தது.
முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகத்தால் நேரம் கடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியும் தொய்வுடன் தான் சென்றது. இதனால் டக்கர் படம் ரசிகர்களை கவரத் தவறியது. ஆனாலும் டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் அனைவரையும் ஆச்சரியப்படும் விதமாக உள்ளது. ஏனென்றால் முதல் நாள் எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் டக்கர் கொடுத்துள்ளது.
அதன்படி டக்கர் படம் முதல் நாள் கலெக்ஷனில் 85 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு போட்டியாக வெளியானது சரத்குமார், அசோக் செல்வன் கூட்டணியில் போர் தொழில் படம். சீரியல் கில்லராக மிகவும் விறுவிறுப்பான கதைகளத்துடன் போர் தொழில் படம் எடுக்கப்பட்டிருந்தது.
இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் சொல்லவே முடியாத அளவுக்கு படத்தை அழகாக கொண்டு சென்றிருந்தார் இயக்குனர். இந்நிலையில் போர் தொழில் படம் முதல் நாளில் 50 லட்சம் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 35 லட்சம் வசூல் செய்துள்ளது.
கேரளாவில் 10 கோடியும், இதர இடங்களில் 5 கோடி வசூல் செய்து இருக்கிறது. மேலும் இப்போது படத்திற்கு தொடர்ந்து பாசிடிவ் விமர்சனம் கிடைத்து வருவதாலும், அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் போர் தொழில் எதிர்பார்க்காத அளவு வசூலை அள்ளும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. போர் தொழில் படத்தால் டக்கர் படத்தின் வசூலும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.