Atharvaa : நடிகர் முரளியின் வாரிசாக சினிமாவில் நுழைந்தவர் தான் அதர்வா. அப்பா போல் சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் போராத காலத்தால் பெரிய அளவில் அவருக்கு படங்கள் போகவில்லை.
இந்த சூழலில் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் இந்த வருடம் அதர்வாவுக்கு சிறப்பான வருடமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வெவ்வேறு ஜானரில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.
மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வருகிறது டிஎன்ஏ படம். இந்த படம் கிரைம் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. அடுத்ததாக இதயம் முரளி படம் அதர்வா கைவசம் இருக்கிறது.
அதர்வா கைவசம் உள்ள ஐந்து படங்கள்
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி படம் உருவாகி வருகிறது. இந்த படம் காதல் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக உருவாகும் படம் தான் அட்ரஸ்.
இப்படம் சமூகத்தைப் பற்றிய கதையாக எடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தணல் என்ற திரில்லர் படத்தில் நடிக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது பராசக்தி படம்.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதர்வா நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பராசக்தி படக்குழு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.