விஜய்யை சந்தோஷப்படுத்த பேசிய ஆர்வக்கோளாறு.. லியோ சக்சஸ் மீட்டால் சந்திக்க போகும் 5 பிரச்சனைகள்

Leo Success Meet: விஜய், லோகேஷ் கூட்டணியின் லியோ வசூல் சாதனை படைத்ததை அடுத்து நேற்று அதன் சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை ஒட்டுமொத்த திரையுலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில் நிகழ்ச்சியில் நடைபெற்ற பல சம்பவங்கள் இப்போது சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

அதில் லோகேஷின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் மேடையில் அனல் பறக்க பேசிய ஒரு விஷயம் தான் இப்போது பல சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின்போது ரஜினி சொன்ன காகம் பருந்து கதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு விஜய் லியோ இசை வெளியீட்டு விழாவில் பதிலடி தருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்காமல் போன சூழலில் சக்சஸ் மீட் நிகழ்வில் ரத்னகுமார் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருந்தார். அதாவது எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ தான் வரணும் என்று அவர் கூறியது தான் இப்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து போய் இருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய்யை சந்தோஷப்படுத்துவதற்காக தான் ஆர்வக்கோளாறில் அவர் இப்படி பேசி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இதன் மூலம் அவர் பின்வரும் ஐந்து பிரச்சனைகளை சந்திக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. முதலாவதாக இந்த பேச்சால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து இருந்தால் நிச்சயம் அது நடக்காது.

அதேபோன்று இப்படி துடுக்குத்தனமாக பேசும் இவர் மற்ற ஹீரோக்களால் தள்ளி வைக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவதாக லோகேஷ் உடனான இவருடைய நட்பில் விரிசல் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. ஏனென்றால் அடுத்ததாக லோகேஷ் தலைவர் 171 படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இந்த சூழலில் ரத்னகுமார் இப்படி பேசி இருக்க தேவையில்லை.

ஆனால் அது நடந்து விட்ட பட்சத்தில் தலைவர் 171ல் வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்கு நிராகரிக்கப்படலாம். ஏற்கனவே அப்படி ஒரு பேச்சு இருந்த நிலையில் இனிமேல் சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினி இருவரும் அவரை உள்ளே கூட விட மாட்டார்கள். ஐந்தாவதாக சோசியல் மீடியாவில் அவருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு. ஏற்கனவே லியோவுக்கு சப்போர்ட் செய்து இவர் போடும் ட்வீட் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது பேசியிருக்கும் பேச்சால் அவர் இன்னும் சில எதிர்வினைகளை சந்திக்க நேரிடும். இப்படியாக இந்த ஐந்து பிரச்சனைகளும் அவருக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது.