ரவி மோகன் நம்பி இருக்கும் 4 படங்கள்.. இதான் கடைசி வாய்ப்பு

Ravi Mohan: ரவி மோகன் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இப்போது தன்னுடைய கதை தேர்வில் தனித்து முடிவெடுத்துவரும் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

ஏனென்றால் ரவி மோகன் கைவசம் இப்போது நான்கு படங்கள் இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்று இப்போது பார்க்கலாம். அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் காமெடி ஜானரில் உருவாகி வருகிறது ஜீனி படம். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

ஜீனி படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி ஆகியோர் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. இப்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

ரவி மோகன் கைவசம் இருக்கும் நான்கு படங்கள்

விஎப்எக்ஸ் வேலை இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்பிருக்கிறது. அடுத்ததாக கணேஷ் கே பாபு இயக்கத்தில் அரசியல் படமாக கரத்தே பாபு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரவி மோகன் எம்எல்ஏவாக நடித்து வருகிறார். இப்போது இறுதிகட்ட வேலை நடந்துவரும் நிலையில் ஜீனி படத்திற்கு முன்னதாகவே ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக புரோ கோட் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்க உள்ள நிலையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் மற்றொரு பெரிய பட்ஜெட் படத்திலும் கமிட்டாகி இருக்கிறாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.