சுந்தர் சி கைவசம் உள்ள 4 படங்கள்.. அடுத்தடுத்து மரண ஹிட் தான்

Sundar C : சுந்தர் சி இப்போது ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். 90ஸ் இயக்குனர்களின் படங்கள் இப்போது ரசிகர்களிடம் பெரும்பாலும் செல்லுபடி ஆகவில்லை. ஆனால் சுந்தர்சியின் படங்கள் தற்போது உள்ள குழந்தைகள் முதல் பலரையும் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வடிவேலு உடன் கூட்டணி போட்டு வெளியான கேங்கர்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டு வருவதால் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருக்கிறது.‌

இதைத்தொடர்ந்து சுந்தர் சி கைவசம் நான்கு படங்கள் இருக்கிறது. முதலாவதாக நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுத்து வருகிறார். முதல் பாகத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கிய நிலையில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

சுந்தர் சி கைவசம் உள்ள நான்கு படங்கள்

இப்போது இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்து வருகிறார். அடுத்ததாக அரண்மனை 4 படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்போது ஐந்தாம் பாகத்தையும் எடுக்க இருக்கிறார்.

மேலும் கலகலப்பு 3 படமும் சுந்தர்-சியின் லைன் அப்பில் இருக்கிறது. இதில் யார் நடிக்கப் போகிறார் என்ற விவரங்கள் விரைவில் தெரியவரும். அடுத்த ஆண்டு தனது கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுக்க இருக்கிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை எடுக்க உள்ளாராம். இவ்வாறு இளம் இயக்குனர்களை காட்டிலும் சுந்தர் சி மிக பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்.