இந்த வாரம் தியேட்டரை குறிவைத்த 4 படங்கள்.. நாக சைதன்யாவுக்கு போட்டியாக வரும் ராசாகண்ணு

பொதுவாக வெள்ளிக்கிழமையில் தியேட்டரில் நிறைய படங்கள் வெளியாவது வழக்கமாக உள்ளது. ஏனென்றால் அடுத்த நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்துடன் தியேட்டர் பக்கம் ரசிகர்கள் வருவார்கள். இதனால் வழக்கமாக இருப்பதை விட கலெக்ஷன் கூடுதலாக அல்லலாம்.

இதை மனதில் வைத்து தான் பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்நிலையில் நாளைய தினம் நான்கு படங்கள் வெளியாக உள்ளது. முதலாவதாக நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற படம் உருவாகியுள்ளது.

சமீப காலமாக ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. இதனால் ஃபர்ஹானா படத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிதும் நம்பி உள்ளார். அடுத்ததாக தன்னை ஒரு ஹீரோவாக நிரூபிக்க வேண்டும் என்று தற்போது வரை போராடிக் கொண்டிருப்பவர் சாந்தனு.

இதற்காக அவர் பல முயற்சிகள் எடுத்தாலும் எல்லாமே தோல்வியில் தான் முடிகிறது. இந்நிலையில் சாந்தனு நடிப்பில் ராவண கோட்டம் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் பட ஆனந்தி நடித்துள்ளார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது.

நாளைய தினம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படத்தில் ஒன்று தான் கஸ்டடி. மாநாடு பட வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கஸ்டடி. இந்த படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி செட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெறும் என்ற நம்பிக்கையில் இயக்குனர் உள்ளார்.

மேலும் நாக சைதன்யாவுக்கு போட்டியாக ஜெய் பீம் ராசா கண்ணும் இறங்க உள்ளார். அதாவது ஜெய் பீம் படத்தில் நடித்த மணிகண்டன் குட் நைட் என்ற படத்தில் நடித்துள்ளார். காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.