இந்த வாரம் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 4 படங்கள்.. சம்பவம் செய்யும் மோகன்லால்

Mohanlal : இந்த வாரம் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியானாலும் பெரிதும் எதிர்பார்க்கும் நான்கு படங்கள் வெளியாகிறது. அவ்வாறு தியேட்டரில் வசூல் வேட்டை ஆடிய படங்களை திரையரங்கில் பார்க்கத் தவறியவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் வெளியானது. இந்த படம் நேர்மையான விமர்சனத்தை பெற்றாலும் டூரிஸ்ட் ஃபேமிலி இப்படத்துடன் போட்டி போட்டதால் பெரிய அளவில் வசூல் செய்ய முடியவில்லை.

இப்போது ரெட்ரோ மே 31ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அடுத்ததாக ஹிட் லிஸ்டில் தொடர் வெற்றிக்கு பிறகு இப்போது ஹிட் 3 படம் வெளியானது. நானி நடிப்பில் வெளியான இந்தப் படம் மே 29ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நான்கு படங்கள்

மோகன்லால், ஷோபனா நடிப்பில் மலையாளத்தில் துடரும் படம் உருவாகி இருந்தது. இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது. ஏப்ரல் 25 தியேட்டரில் வெளியான இந்த படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் மே 30 ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.

ஆகையால் தியேட்டரில் எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அடுத்ததாக கன்னடத்தில் உருவான அஞ்ஞாதவாசி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு குற்றப் பின்னணி கதையை கொண்டு மிகவும் தரமுடன் இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இப்படம் மே 28ஆம் தேதி ஜீ 5 ஓடிடியில் வெளியாகிறது. இந்த நான்கு படங்களும் கண்டிப்பாக ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இடம்பெறும்.