யூட்யூப்பை அதிர வைத்த தளபதியின் 4 சாங்.. ஒரு நாளில் இவ்வளவு வியூஸா

Actor Vijay: தற்போது பெரிய பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் எப்பொழுது திரையரங்குகளில் வெளிவரும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்த டீசர், டிரைலர் என்று வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் படம் வெளிவருவதற்கு முன்னாடியே அதனுடைய பாடல்கள் வெளிவந்து எல்லாரையும் முணுமுணுக்க வைக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த படங்களின் பாடல்கள் அனைவரையும் அதிரிபுதிரியாக குஷி படுத்திருக்கிறது. முக்கியமாக அந்த பாடல்கள் யூட்யூப்பில் வெளிவந்த 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து அதிர வைத்திருக்கிறது.

அதில் பீஸ்ட் படத்தில் வெளியான “ஜாலி ஓ ஜிம்கானா” பாடல் வெளியான ஒரு நாளில் 15மில்லியன்ஸ் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. அடுத்ததாக வாரிசு படத்தில் வெளியான ” ரஞ்சிதமே” பாடல் 17M பார்வையாளர்களை தாண்டி குஷி படுத்திருக்கிறது.

மேலும் இன்னும் திரையரங்களில் வெளிவராமல் இருக்கும் லியோ படத்தின் பாடல் ” நா ரெடி தா வரவா அண்ணன் நா இறங்கி வரவா” இந்தப் பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 18மில்லியன்ஸ் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

அடுத்ததாக எல்லாத்தையும் அடித்து தூக்கிய பாடல் பீஸ்ட் படத்தில் வெளியான “அரபிக் குத்து”
பாடல். இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 24M பார்வையாளர்களை கவர்ந்து
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள ரசிகர்களை இழுத்து இருக்கிறது. இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் பாடல், டான்ஸ் என்று அனைவரையும் காந்தத்தால் ஈர்த்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் இனிவரும் படங்களிலும் இதையெல்லாம் பிரேக் பண்ற அளவிற்கு அவருடைய பாடல்கள் அதிர வைக்கப் போகிறது. பொதுவாக எந்த நடிகர்களுக்குமே இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. இதெல்லாம் விஜய்க்கு கைவந்த கலை. அத்துடன் இவருடைய டான்ஸுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஸ்டைலிஷ் ஆன டான்ஸ்ர்.