Ajith: 2025 தொடங்கி மூன்று மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த வருடத்தின் கால் ஆண்டுகளைக் கடந்த நிலையில் வெறும் நான்கு படங்கள் தான் ஹிட்டாகி இருப்பது என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
தொடக்கத்தின் முதல் ஆண்டான ஜனவரி மாதத்தில் கிட்டத்தட்ட 26 படங்கள் வெளியாகி இருந்தது. இதில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஷாலின் மதகத ராஜா படம் வெளியானது.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பின்பு இந்த படம் வெளியானாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஜனவரி மாதத்தில் வெளியாகி ஹிட்டான இரண்டாவது படம் மணிகண்டனின் குடும்பஸ்தன்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரியில் 19 படங்கள் வெளியானது. அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி, தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளியானது.
2026 இல் ஹிட்டான நான்கு தமிழ் படங்கள்
பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படங்கள் பிளாப் ஆகிவிட்டது. மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் மட்டும் பிப்ரவரி மாதத்தை காப்பாற்றியது.
அடுத்ததாக மார்ச் மாதத்தில் 19 படங்கள் வெளியான நிலையில் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் 2 படம் மட்டும் வசூல் வேட்டையாடி வருகிறது.
அவ்வாறு இந்த வருடம் இதுவரை வெளியான 64 படங்களில் 4 படங்கள்தான் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போய் உள்ளது. மற்ற 60 படங்களும் தோல்வியை சந்தித்தது. இதை பார்த்தால் தமிழ் சினிமா மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பது போல் தெரிகிறது.