ஜுராசிக் பார்க் படத்திற்கு டஃப் கொடுக்கும் கங்குவா.. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சூர்யா

Actor Surya in Ganguva: பொதுவாக இளம் வயதில் ஆழமாக மனதிற்குள் பதிந்த விஷயங்கள் எப்போதுமே அழிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய உணர்வை ஏற்படுத்தி இருக்கும். அப்படித்தான் நாம் அனைவரும் சிறுவயதில் பார்த்து பயந்து ரசித்த படம் ஜுராசிக் பார்க். இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமா என்று வியப்பை ஏற்படுத்தி பார்ப்பவர்களிடம் இருந்து அதிக ஹைப்பை உண்டாக்கி இருக்கும்.

இதற்கு அடுத்து எத்தனையோ படங்கள் வித்தியாசமான டெக்னாலஜியை பயன்படுத்தி பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருந்தாலும், நாம் முதலில் பார்த்து ரசித்த ஜுராசிக் பார்க் படத்தை காலத்துக்கும் அளிக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட இப்படத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இயக்குனர் சிறுத்தை சிவா, சூர்யாவை வைத்து கங்குவா படத்தை மிகப் பிரமாண்டமாக எடுத்துக்கொண்டு வருகிறார்.

இப்படம் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் வெளியிட்டு, 3டி டெக்னாலஜியை பயன்படுத்தி மிகப்பெரிய பான் இந்திய படமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அத்துடன் இந்தப் படத்தில் தான் முதன்முதலாக அதிக பட்ஜெட்டில் சூர்யா நடித்துக்கொண்டு வருகிறார்.

தற்போது இப்படத்தின் சூட்டிங் சென்னை EVP-யில் நடைபெற்று வருகிறது. அங்கே சூர்யா ரப்பர் முதலையுடன் சண்டை போடுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீனுக்கு பிறகு படக்குழுவில் உள்ள அனைவரும் தாய்லாந்துக்கு சென்று விலங்குகளிடம் பயிற்சி எடுக்கப்பட்டு அதற்கான டூப் போட்டு சூர்யா நடிக்க இருக்கிறார்.

இதற்கு அடுத்து ஜுராசிக் பார்க் படத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பயன்படுத்திய அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை வைத்து சில காட்சிகளை எடுப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த டெக்னாலஜியை பயன்படுத்துவதால் மக்கள் விரும்பி பார்க்கும் வகையில் இப்படத்தின் காட்சிகள் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் சிறுத்தை சிவா ரொம்பவே மெனக்கீடு செய்து படத்தை எடுத்துக் கொண்டு வருகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி சிறுத்தை  சிவா என்னெல்லாம் சொல்கிறாரோ அதை எல்லாம் செய்ய தயாராக இருக்கிறார் சூர்யா. அந்த வகையில் இயக்குனர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சூர்யா அழகாக வளைந்து கொண்டு நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பயன்படுத்தப்படும் டெக்னாலஜியை அடுத்து சங்கரும் அவருடைய படத்தில் பயன்படுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.