பல பேர் வாழ்க்கையை காப்பாற்றிய குட் பேட் அக்லி.. ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்ட தயாரிப்பாளர்

சமீபகாலமாக தமிழ் சினிமா மிகவும் நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்தது. பல தியேட்டர் ஓனர்கள் திரையரங்குகளை மூடிவிட்டு வேறு தொழில் பார்க்கலாம் என யோசனையில் இருந்தார்கள் ஆனால் அவர்களை எல்லாம் தூக்கி நிறுத்தியது அஜித்தின் குட் பேட் அக்லி படம்.

தமிழ்நாட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.இந்தியன் 2, லால் சலாம், விடாமுயற்சி, வணங்கான், காதலிக்க நேரமில்லை என பல படங்கள் தியேட்டர்களில் வருவதும் போவதுமாய் இருந்தது. இந்த படங்களால் நல்ல கலெக்ஷன் ஏதும் இல்லாத போது சமீபத்தில் வந்த படங்களெல்லாம் லாபத்தை கொடுத்து வருகிறதாம்.

அதிலும் அஜித்தின் குட் பேடு அக்லி 180 கோடிகள் வரை வசூலித்து தியேட்டர் ஓனர்களை குஷிப்படுத்தியதாம். விஜய் இல்லாத இந்த நேரத்தில் இதேபோல் அஜித் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார் தயாரிப்பாளர் ஒருவர். சமீபத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், டிராகன், வீர தீர சூரன்,மதகஜராஜா போன்ற படங்களில் நல்ல லாபம் கிடைத்துள்ளதாம்.

எப்பொழுதுமே நேருக்கு நேர் பேசி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர் ராஜன் இந்த முறை அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை பற்றியும் பேசி உள்ளார். இந்த படம் மீண்டும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தி உள்ளது. இந்த படத்தால் பல பேருடைய கஷ்டம் தீர்ந்து விட்டதாகவும் கூறி உள்ளார்.

சுமார் 250 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் தியேட்டரில் மட்டும் 180 கோடிகள் வசூலித்தது. அது மட்டுமின்றி நெட்பிலிக்ஸ் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை 95 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. இதுபோக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் ஒரு பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.