இந்தப் பூனைக்கு மணிக்கட்டுங்கள்.. முதல் நாளே வெளியான குட் பேட் அக்லி HD பிரிண்ட்


Good Bad Ugly: சமீபகாலமாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அதாவது படம் வெளியான சில நாட்களிலேயே இணையத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு விடுகிறார்கள்.

இதனால் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல பேர் கடின உழைப்பை போட்டு, தயாரிப்பாளர் வட்டிக்கு பணம் வாங்கி ஒரு படத்தை எடுக்கிறார். ஆனால் அசால்டாக இணையத்தில் படத்தை வெளியிட்டதால் மக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்ப்பதில்லை.

இப்போது அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 வெளியானது. முதல் நாளே HD பிரின்ட் உடன் படத்தை இணையத்தில் வெளியீட்டு விட்டார்கள். இது சினிமா துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்திருக்கிறார்.

இணையத்தில் வெளியான குட் பேட் அக்லி HD பிரிண்ட்

suresh-kamatchi
suresh-kamatchi

இவர் மாநாடு, வணங்கான் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதாவது சுரேஷ் காமாட்சி, சினிமாவில் நடக்கும் எதுவும் பயனா, பயனற்றதா என்ற கேள்வி எல்லா சினிமா காரர்களுக்கும் எழாமல் இல்லை. எல்லோரும் பிளவு படப் பட இன்னும் வீழ்தலே நிகழும்.

படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதை ஒழிப்பதை பற்றி பேச வேண்டும். தயாரிப்பாளர் சங்கங்கள், திரையரங்குகள், உழைப்பவர்கள் என்று எல்லோரும் ஒன்று கூடி குரல் கொடுக்க வேண்டும்.

எல்லோரும் போராட முன்வந்து இது போன்று திருடுபவர்கள் யார் என்று கண்டறிய வேண்டும். இந்த பூனைகளுக்கு மணிக்கட்டுங்கள். மேலும் திரை உலகம் செழிக்க பணியாற்றங்கள் என்று வேண்டுகோளை சுரேஷ் காமாட்சி வைத்திருக்கிறார்.

மேலும் குட் பேட் அக்லி படம் 500 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்ப்புடன் இருந்த தயாரிப்பாளருக்கு இது இடியாகத்தான் அமைந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற நடக்காமல் இருக்க முயற்சி எடுத்தால் தான் சினிமா செழிப்பாக இருக்க முடியும்.