சரிவை சந்தித்த குட் பேட் அக்லி.. 2வது நாள் வசூல் இவ்வளவு தானா.?

Good bad ugly second day collection : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை கருத்தில் கொண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியிடப்பட்டது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் முதல் நாளே பெரும் லாபத்தை கொடுத்தது.

அதன்படி குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு மட்டும் கிட்டத்தட்ட 30.9 கோடி வசூல் செய்ததாக அறிவித்திருந்தது.

அஜித்தின் கேரியரில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. போற போக்க பார்த்தா விரைவில் 500 கோடியை குட் பேட் அக்லி எட்டும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது நாளே பெரும் சருக்களை சந்தித்திருக்கிறது.

குட் பேட் அக்லி இரண்டாவது நாள் கலெக்ஷன்

முதல் நாளை விட 54 சதவீதம் வீழ்ச்சியை அடைந்திருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை வெறும் 13.50 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இதுவரை குட் பேட் அக்லி படம் 43 கோடி வசூல் செய்திருக்கிறது.

நேற்று வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் குறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு குட் பேட் அக்லி படத்தின் hd பிரிண்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது. இது கூட வசூல் குறைவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.

இரண்டாவது நாள் பெரும் வீழ்ச்சி அடைந்ததால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உறைத்து இருக்கிறது. மேலும் அடுத்தடுத்து தொடர் விடுமுறையிலாவது படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.