தவிர்க்க முடியாத ஹீரோவாக இன்று சினிமாவில் வெற்றி பெற்று வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் செல்லப் பிள்ளையான இவரை தேடி இப்பொழுது காதல் கதைகளை மையமாக கொண்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
சமீபத்தில் இவரை தேடி சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதை அவர் மறுத்து விட்டாராம். வீட்டிற்கு அடங்காத பிள்ளை, ரெக்குடுபாய் இமேஜில் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறோம், ரொம்ப நல்லவனாக நடித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நிராகரித்து விட்டாராம்.
விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 96. தோல்விகளை கண்டு துவண்டு போயிருந்த விஜய் சேதுபதிக்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஹிட் அடித்தது இந்த படம். பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரெடி பண்ணிவிட்டார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேசிடம் இந்த கதையை சொல்லி அவரை சிலாகிக்க செய்துவிட்டாராம். பிரமாதமாக இருக்கிறது என்று உடனே ஒரு தங்க சங்கிலியையும் அவருக்கு பரிசளித்துள்ளார் ஐசரி கணேஷ். ஆனால் 96 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி அவ்வளவு இன்ட்ரஸ்ட் காட்ட வில்லையாம்.
இதனால் தான் இந்த வாய்ப்பு பிரதீப்பை தேடி சென்றுள்ளது. கதையைக் கேட்ட அவரும் செமையாக இருக்கிறது ஆனால் என் இமேஜ் இதற்கு செட்டாகாது என மறுத்துவிட்டாராம். இதனால் இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை தேடி வருகிறது பிரேம்குமார் தரப்பு.