Manikandan’s Next Project: காலா, ஜெய்பீம் என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் மணிகண்டனின் நடிப்பில் சமீபத்தில் குட் நைட் படம் வெளியாகி இருந்தது. காமெடி அலப்பறைகளுடன் இருந்த அப்படம் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது.
அதை அடுத்து அவரின் அடுத்த படம் பற்றிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த வகையில் குறட்டை விட்டே பலரின் தூக்கத்தை கெடுத்த மோட்டார் மோகன் அடுத்ததாக லவ்வர் மூலம் களம் இறங்குகிறார். சீன் ரோல்டன் இசையில் பிரபுராம் இப்படத்தை இயக்குகிறார்.
குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இதன் போஸ்டரை பார்க்கும் போதே இது ஒரு காதல் தோல்வி கதையாக இருக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால் போஸ்டர் முழுவதும் சரக்கு, சிகரெட் என நிறைந்து கிடக்கிறது.
அதில் மணிகண்டன் ஒரு கையில் கட்டும் ஒரு கையில் சிகரெட்டும் என சோகத்தோடு இருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் இப்பதான் அவரை வேறு கோணத்தில் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே குட் நைட் மூலம் வெற்றி பெற்ற இந்த கூட்டணி மீண்டும் ஒரு ஹிட்டுக்கு தயாராகி உள்ளது.
மேலும் பெயருக்கு ஏற்றது போல் அடுத்த வருட காதலர் தினத்திற்கு இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த போஸ்டர் தற்போது எதிர்பார்ப்பை கிளப்பி வைரலாகி வருகிறது. அது மட்டுமின்றி மணிகண்டன் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சரக்கு, தம் என வைரலாகும் டைட்டில் போஸ்டர்
