Dhruva Natchathiram: கௌதம் மேனன், விக்ரம் கூட்டணியில் துருவ நட்சத்திரம் பல வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. ஆனால் பல்வேறு பிரச்சனையின் காரணமாக கிடப்பில் இருக்கிறது.
இருப்பினும் கடந்த இரு வருடமாகவே படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கூட பிரச்சினையின் காரணமாக படம் வெளியாகவில்லை.
இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்த ரசிகர்கள் கூட படம் ரிலீஸ் ஆகாது என முடிவெடுத்து விட்டனர். ஆனாலும் இப்படம் பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என்பது இயக்குனரின் கனவு.
கடந்த சில மாதங்களாகவே அதற்கான முயற்சியில் தான் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முதலீட்டாளர்களிடம் படத்தைக் காட்டி அவர்களுக்கும் பிடித்து விட்டதாம்.
கௌதம் மேனன் ஒரு முடிவோட தான் இருக்காரு
சில சட்ட சிக்கல்களை சுமூகமாக முடித்துவிட்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார். அதுவரை வேறு எண்ணமே எனக்கு கிடையாது. நான் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை.
துருவ நட்சத்திரம் வெளிவந்த பிறகு தான் மற்றவை எல்லாம் என அவர் கூறியிருக்கிறார். இதனால் சீயான் ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் இருக்கின்றனர்.