“கௌதம் வாசுதேவ் மேனனை என்னையா பண்ணி வச்சிருக்கீங்க” இதுதான் இப்பொழுது ஹாட்டஸ்ட் மீம்ஸ்சாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அவருக்கு எவ்வளவு தான் கடன் இருக்கிறது நாங்கள் வசூலித்து தருகிறோம் அதற்காக அவரை இப்படி செய்யாதீர்கள் என எல்லா பக்கத்தில் இருந்தும் மீம்ஸ்கள் வர தொடங்கியுள்ளது.
மே 16 சந்தானத்தின் டிடி தொடர் படங்களான டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் நடிக்கிறார்கள். இவர்களை தவிர மொட்ட ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, மாறன், போன்றவர்களும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்தது தான் இப்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் யாசிகா ஆனந்தை உருகி உருகி காதலிப்பதை போல் காட்சிகள் ட்ரைலரில் வருகிறது. அதையும் தாண்டி அவர் அடித்த லூட்டிகள் தான் தற்சமயம் மீம்ஸ்சாக வலம் வருகிறது.
காக்க காக்க படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆடிய எவர்கிரீன் பாடலான உயிரின் உயிரே பாடலை அப்படியே ரீமிக்ஸ் செய்து கௌதம் வாசுதேவ் மேனனை ஆட வைத்துள்ளனர். இவர் சூர்யா போல் கடற்கரையில் ஓடி வருவது தான் ஆச்சரியம் கலந்த காமெடியாக இருக்கிறது.
இதற்கு பின்னால் ஒரு பெரிய ரகசியமே இருக்கிறதாம். இந்த படத்தை தயாரிக்கும் “ ஷோ பீப்பிள் என்டர்டெயின்மென்ட்” அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது. அதில் சந்தானம் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.
கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் இப்பொழுதுதான் மீண்டும் காமெடி கலந்த கதாபாத்திரம் நடிக்க சம்மதம் தெரிவித்து வந்தார் ஆனால் மீண்டும் கௌதம் அவரை ஹீரோவாக மாற்றினால் வேதாளம் முருங்கை மரத்தை விட்டு இறங்குமா என்பதுதான் அனைவரது கேள்வியும்.