பழைய மாதிரி மங்காத்தா ஆடி வருகிறார் அஜித். வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி குட் பேட் அக்லீ ட்ரெய்லர் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கள் என இந்தப் படத்தை ஏகே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுவும் போக இந்த படத்தில் மூன்று கெட்ட பில் அஜித் வருகிறாராம்.
எங்களுக்கு உண்மையான தீபாவளி ஏப்ரல் 10ஆம் தேதி என ஒரு பக்கம் ரசிகர்கள் அல்லோலப்பட்டு கொண்டிருக்கும் போது இந்த படத்துக்கு மேலும் ஹைப் ஏற்றும் விதமாக ஜிவி பிரகாஷ் பல இடங்களில் மியூசிக்கில் தெறிக்க விட்டிருக்கிறார். இப்பொழுது இந்த படம் சென்சார் சான்றிதழுக்கு போய் உள்ளது.
இந்த படத்திற்கு மியூசிக் பக்கபலமாக இருக்கும் என ஏற்கனவே ஆதிக்ரவிச்சந்திரன், ஜி வி பிரகாஷை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார். அந்த அளவிற்கு இதில் பின்னணி இசையிலும், ரீ ரெக்கார்டிங்கிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார் ஜீவி. எந்த ஒரு மாற்றங்களும் செய்யாமல் அஜித் கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் அனிருத் தான் வேண்டும் என்று கூறினார்கள் அதன் பின் அவரிடம் இருந்து இது தேவி ஸ்ரீ பிரசாத் கையில் போனது. கடைசியாக ஜிவி பிரகாஷ் கைக்கு வந்துள்ளது.
அனிருத் செம பிசியாக இருந்து வருகிறார். அவரிடம் சென்றால் கடைசி வரை போராட வேண்டியதாக இருக்கும். ஆனால் ஜிவி பிரகாஷ் சொன்ன நேரத்திற்கு கரெக்டா எல்லாத்தையும் செய்து முடித்துள்ளார். இதுவே அஜித்தை மிகவும் கவர்ந்து விட்டதாம். சொன்ன தேதிக்கு முன் அனைத்து வேலைகளையும் முடித்து கையில் கொடுத்ததால் ஆதிக் மிகவும் சந்தோசமாக இருக்கிறாராம்.