காந்தாரா 3-ல் நடிக்கப்போகும் ஹீரோ யார் தெரியுமா?

இந்தியப் பழங்கதை மற்றும் கலாச்சார மரபுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படம், ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படம் மட்டுமல்ல, அதன் ப்ரீக்வல் ‘காந்தாரா Chapter 1’ அக்டோபரில் திரைக்கு வரவுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மூன்றாவது பாகமான ‘காந்தாரா 3’ குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.

இந்த தகவல்படி காந்தாரா 3ல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிவந்துள்ள நிலையில், ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

RRR, Janatha Garage, Temper, Aravinda Sametha போன்ற ஹிட் படங்களில் நடித்து தன் திறமைகளை நிரூபித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இப்போது திரிவிக்ரம் இயக்கும் புராண திரைப்படம் மற்றும் ‘காந்தாரா 3’ என இரண்டு புராணப் படங்களில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘காந்தாரா’ படங்களை இயக்கும் ரிஷப் ஷெட்டி, ஆன்மீகக் கதைகளையும் இந்திய மரபுகளையும் நுட்பமாக இணைக்கும் திறமை கொண்டவர். அவருடன் இணையும் Hombale Films, KGF, Salaar போன்ற ஹிட் படங்களை வழங்கிய நிறுவனம். இவர்கள் இணைந்து உருவாக்கும் ‘காந்தாரா 3’ போக்லோர் யுனிவர்ஸ் ஒரு தனி சினிமா உலகமாக உருவெடுத்து வருகிறது.

காந்தாரா 3’ என்பது Chapter 1 நிகழ்வுகளுக்கு பிந்தைய தொடர்ச்சியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜூனியர் என்டிஆர், ரிஷப் ஷெட்டியும் இணையும் இந்த கூட்டணி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.