ரொமான்ஸ்சே தெரியாமல் குணசேகரன் போட்ட முரட்டு கபி கபி.. எடக்கு எகடாசியில் மாரிமுத்துவை மிஞ்சிய நந்தினி

எப்பொழுதுமே முரட்டு குணத்தோடு காணப்படும் குணசேகரன் இப்பொழுது கோபத்தை அடக்கிக் கொண்டு சைக்கோ வில்லனாக மாறிவிட்டார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் மனநோயாளியாக மாறிவிட்டார் குணசேகரன்.

பெண்கள் அடுப்பாங்கரையில் தான் இருக்க வேண்டும், ஆண்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் இதுதான் அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. அம்மா விசாலாட்சி அம்மையாரிடமும், வீட்டுப் பெண்களை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தி கொடுமைகளை அரங்கேற்றுமாறு கூறி வருகிறார் குணசேகரன்.

வீட்டிற்கு திடீரென வரும் விருந்தாளிகளுக்கும் சமைத்து போடும்படி, ஓவர் அராஜகம் செய்கிறது குணசேகரனின் தரப்பு. வந்தவர்களை வலுக்கட்டாயமாக சாப்பிட்டு செல்லுமாறு கூறி மருமகள்களை அடிமைகளை போல் வேலை வாங்குகிறார். இது ஒரு பக்கம் இருக்க மனைவி ஈஸ்வரிக்கும் செக் வைக்கிறார்.

குணசேகரன் தன்னுடைய ரூமில் தண்ணீர் வராதது போல் பைப்பை அடைத்து விட்டு கீழே பொது பாத்ரூமில் குளிக்க செல்கிறார். தண்ணீர் வாலியை தூக்கியவர் கையில் அடிபட்டது போல் நடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஈஸ்வரி பதறிப்போய் வந்து அவரை குளிப்பாட்டி விடுகிறார், இதையும் மனதிற்குள் மகிழ்ந்து சைக்கோ தனத்தின் உச்சம் செல்கிறார்.

இப்படி ரொமான்ஸ்சே தெரியாமல், நல்லாத்தான் இருக்கிறது இப்படி குளித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என உள்ளுக்குள்ளேயே பூரித்துபோகிறார். ஒரு பக்கம் நந்தினி இது ஒரு காக்கா குளியல் கேஸ், சோப்பு கூட போடாமல் கையில் தேய்க்கும் ஆளு என குணசேகரனை கலாய்த்து தள்ளுகிறார்.