சைக்கோவாக மாறி சந்தோசப்படும் பரோல் பாண்டியன்.. விசாலாட்சியை பகடையாய் வைத்து மன நோய்க்கு மருந்து போடும் குணசேகரன்

எதிர்நீச்சல் 2டில் குணசேகரன் மருமகள்களை அடக்கி ஆள்வதற்கு புதிதாய் ஒரு சைக்கோ தனத்தை கையில் எடுத்து உள்ளார். ஏற்கனவே அவர் விட்ட சபதத்தை நிறைவேற்றுவதற்காக வீட்டை விட்டு வெளியே போன மருமகள்களை சூழ்ச்சி செய்து மீண்டும் வீட்டிற்கு வரவழைத்து விட்டார்.

காசு கொடுத்து தங்களையே தப்பா பேசும் படி ஆட்களை நியமித்து செய்த சூழ்ச்சியால் மருமகள்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். அவர்கள் அடுப்பாங்கரையில் பழையபடி வேலை செய்து கஷ்டப்படுவதை வெளியில் ஜன்னல் ஓரமாய் நின்று ஒரு சைக்கோ போல் பார்த்து ரசிக்கிறார்.

அடுத்த கட்டமாக விஷம் குடிக்கும் நாடகத்தையும் அரங்கேற்றி விட்டார். அதில் வசமாக தன்னுடைய அம்மா விசாலாட்சியையும் சிக்க வைத்து, அவரை பகடைக்காயாய் உருட்டி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். மாமியாருக்காக மருமகள்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி விடுகிறார்கள்.

இப்பொழுது சைக்கோ தனத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார் குணசேகரன். அம்மா விசாலாட்சியை கவனிக்கும் கூடுதல் பொறுப்பும் மருமகள்களுக்கு வந்து சேர்கிறது. ஒரு கட்டத்தில் மருந்து மாத்திரை கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. விசாலாட்சியே நேரத்துக்கு மருந்து சாப்பிடுவதை தவிர்க்கிறார்.

இதனை வைத்து ஒரு பிரச்சனையை உருவாக்குகிறார் குணசேகரன். அம்மாவிற்கு சரியான கவனிப்பு இல்லை என்ற பிரச்சினையை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் தம்பிகள் அனைவரும் தங்களது மனைவிகளிடம் சண்டைக்கு செல்கிறார்கள். இதனை பார்த்து அவரது சைகோர்த்தனம் சந்தோஷப்படுகிறது. தம்பிகளை திட்டுவது போல் திட்டி எரிகிற நெருப்பில் என்னை ஊற்றுகிறார்.