எதிர்நீச்சல், குணசேகரன், கதிர் மற்றும் அறிவுக்கரசி மூவரும் கம்பி என்னும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழியாக அண்ணன் தம்பிகளுள் யாராவது ஒருவர் சரண்டராக முன்வர வேண்டும். இது தான் தப்பிக்க ஒரே வழி என வக்கீல் அறிவுரை கூறினார்.
இதனால் குணசேகரன் தனது வலதுகரமாக இருக்கும் கதிரை அனுப்பாமல் உப்புக்கு சப்பானியானா ஞானத்தை அனுப்பி தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்துள்ளார். ஞானத்தை அனுப்பினால் தான் வீட்டுப் பெண்கள் மனது உடையும் என தந்திரம் செய்கிறார்.
எந்த வம்புக்கும் போகாமல் ஞானம் கேட்பார் பேச்சு கேட்டு ஆடக்கூடியவர். நல்லது கெட்டது தெரியாது, அண்ணன் தன்னை பார்த்துக் கொள்வார், சொத்துக்களில் பங்கு கொடுப்பார் என மனக்கணக்கு போட்டு எல்லாத்துக்கும் தலை ஆட்டிக்கொண்டு சரண்டர் ஆகும் எண்ணத்தில் இருக்கிறார்.
இன்று நடைபெற உள்ள தொடரில் கோர்ட்டில் நான் தான் பார்கவி தந்தையான குருநாதனை தள்ளிவிட்டதாகவும், அவர்தான் மரத்தில் மோதி இருந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்து அப்ரூவராக உள்ளார். இப்படி அண்ணனை நம்பி உள்ளே செல்ல போகும் ஞானத்துக்கு தெரியாது அது ஒரு சூழ்ச்சி வலை என்று.
ஞானத்தை அனுப்பினால் தான் வீட்டு பெண்களின் ஒற்றுமையை குறைக்க முடியும். தப்பே செய்யாமல். ஞானசேகரன் உள்ளே செல்ல உள்ளார். இது அவர்களின் மனசாட்சியை உறுத்தும். இந்த வழக்கை பற்றி அவர்களுக்கு வேறு விதமாக யோசிக்க தோணாது என எனது ஆட்டத்தை ஆடி உள்ளார் குணசேகரன். இது எதுவுமே அவரது தம்பி சக்திக்கு தெரியாது. கதிர் மற்றும் அறிவுக்கரசி தொடர்ந்து சக்தியை டம்மியாக்கி வருகிறார்கள்.