எதிர்நீச்சல் 2 கடந்த பத்து நாட்களாக மணிவிழாவை வைத்து எபிசோடை மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறார் ஜீவானந்தம். மருமகள்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் குணசேகரனின் தம்பிகள் இதில் முழுமூச்சாக இறங்கி விட்டார்கள்.
எல்லா பக்கமும் பத்திரிகை அழைப்பு கொடுக்க சென்று பாதி இடங்களுக்கு மேல் மொக்கை வாங்குகிறார்கள். அவர்கள் முந்தைய காலத்தில் எடுத்தெறிந்து பேசியவர்கள் எல்லோரும் இதுதான் சந்தர்ப்பம் என அவர்கள் செய்த அட்டூழியங்களை சுட்டிக்காட்டி உதாசீனப்படுத்துகிறார்கள்.
குறிப்பாக நந்தினி வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுத்த செல்லும்போது அவரின் அப்பா கதிரை விட்டு விலாசுகிறார். உங்கள் அண்ணனை போல் தேவை இருக்கும் நேரத்தில் ஒருவரை பயன்படுத்திவிட்டு அடுத்து அவரை உதாசீனப்படுத்தும் பழக்கம் உங்களிடம் இருக்கிறது என சவுக்கடி கொடுக்கிறார்.
ஒரு பக்கம் வீட்டில் குணசேகரன் வைத்திருக்கும் உளவாளி ஜான்சி ராணி சாமியார் வேஷம் போட்டு ஒவ்வொருத்தர் செய்கையையும் நோட்டமிடுகிறார். சாமி கும்பிடுவது போல் அமர்ந்து கொண்டு ஃபோனில் பேசும் மருமகள்களை நோட்டமிட்டு கண்காணிக்கிறார். ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா பேசுவதை ஒட்டு கேட்கிறார்.
ஜான்சி ராணியை அந்த வீட்டுக்குள் கொண்டு வந்ததே குணசேகரன் தான். மருமகள்கள் ரகசியமாக பேசுவதை கேட்டு அவரிடம் சொல்வதற்காக உளவாளி வேலை கொடுத்துள்ளார் குணசேகரன். இப்படி யாருக்கும் தெரியாமல் காய் நகர்த்தி வருகிறார். ஆனார் ஜான்சி ராணி சைடு கேப்பில் அவருக்கே ஆணி அடித்து விடுவார் என்பதும் அவருக்கு தெரியும்.