பேய் படங்களை விட ஹாரராய் போய்க்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் 2.. வீட்டில் எல்லோருக்கும் லீடராக இருக்கும் ஜனனி டெட் அலர்ட் டை சந்தித்துள்ளார். மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பூந்தொட்டி ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது. காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தப்பித்துள்ளார் ஜனனி.
இப்பொழுது அனைவரது கேள்வியும் யார் இந்த வேலையை செய்தது என்பதுதான். வீட்டில் கொஞ்ச நாட்களாக மருமகளை அடக்குகிறார்கள். பதிலுக்கு அவர்கள் தரப்பிலிருந்து நாங்கள் எங்களுக்கு தெரிந்த வேலைகளை பார்த்து முன்னேற போகிறோம் என்று விடாப்பிடியாய் நிற்கிறார் ஜனனி.
இதுதான் இப்பொழுது குணசேகரனுக்கு பெரிய இடையூறாக இருக்கிறது. அவர் ஆசையே மருமகள்களை வீட்டுக்குள் அடைத்து வேலை வாங்குவதுதான், அவர்கள் முன்னேறக்கூடாது என்பது தான் அவரது சைக்கோ தனமான பேராசை, இதற்கு ஜனனியால் அடிக்கடி எதிர்ப்பு வருகிறது.
இது குணசேகரனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. இந்த கட்டத்தில் தான் ஜனனிக்கு இப்படி ஒரு உயிர் ஆபத்து வந்துள்ளது. காணாமல் போன செல்போன் வீட்டு காம்பவுண்ட் சுவர் பக்கத்தில் கிடக்கிறது. எடுக்கச் சென்ற ஜனனி மீது மேலே இருந்து பூந்தொட்டி விழுந்து கால்களில் அடிபட்டுள்ளது.
ஜனனிக்கு 90% குணசேகரன் மீது தான் சந்தேகம் இருக்கிறது. மருத்துவமனைக்கு சென்ற ஜனனியை பார்ப்பதற்கு வந்த குணசேகரன் அவருக்கு டெட் அலர்ட் கொடுத்துள்ளார். தெரியாத வேலையை செய்தால் இப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்து சென்றுள்ளார்.