விருந்தாளிகளை எல்லை மீறி அசிங்கப்படுத்தும் ஜான்சி ராணி.. நந்தினி கொடுத்த கவுண்டர் அட்டாக்

எதிர்நீச்சல் 2 மணிவிழா பங்க்ஷன் ஜருராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய மல்லுவேட்டி மைனாராக வந்து நிற்கிறார் குணசேகரன். விருந்தாளிகள் ஒவ்வொருத்தராக வரத் தொடங்கி விட்டார்கள். வந்தவர்களுக்கு நந்தினி கவுண்டர் அட்டாக் கொடுத்து வருகிறார்.

வந்து நையாண்டிபேசுபவர்களை பார்த்து நாலு காப்பி ரெண்டு டீ குடிச்சிட்டு பேசாமல் போக வேண்டும் என அவர்அரட்டுவது நகைச்சுவையாக இருந்தது. விருந்தாளிகளை குத்தலாக பேசும் ஜான்சிக்கும் சரியான பதிலடி கொடுத்து வருகிறார் நந்தினி.

ஈஸ்வரியின் தந்தை சேதுராமனை, கடல் போல் சீர் கொண்டு வர வேண்டாமா என வாய்க்கொழுப்பாய் பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் ஜனனியின் தந்தை நாச்சியப்பனையும் வம்புக்கு இழுக்கிறார். தந்தை அவமானப்படுவதை பார்த்து ஜனனியும் கஷ்டப்படுகிறார்.

எல்லை மீறி பேசிய ஜான்சி ராணியை வாயை மூடு இல்லாவிட்டால் தேங்காயை எடுத்து மண்டையை பொளந்து விடுவேன் என பயமுறுத்துகிறார் நந்தினி. மறுபக்கம் மாமியார் விசாலாட்சிக்கும் பல கவுண்டர்கள் கொடுத்து வருகிறார். இந்த கிழவிக்கு நந்தினியைத் தவிர வேறு பெயர் வாயில் வராதா என சலித்துக்கொள்கிறார்.

வந்த விருந்தாளிகளில் ஒருவர் நந்தினியை பார்த்து வீட்டை விட்டு வெளியே போய் விட்டீர்களாமே என கேட்டதற்கு உங்கள் தங்கையும் தான் ஓடிப் போய்விட்டாள் நான் ஏதாவது கேட்டேனா என அவர் வாயை அடைக்கும் காட்சி குபிரென சிரிப்பலைகளை வரவழைத்தது. இப்படி மணிவிழாவை சிரிப்பு விழாவாக கொண்டு செல்கிறார் நந்தினி.