வலிமை கிளைமேக்ஸை ஹைதராபாத் என்கவுண்டருடன் சம்பந்தப்படுத்திய ஹெச். வினோத்.. அதிர வைக்கும் பேட்டி

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ஏகப்பட்ட பைக் ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தை பலர் ட்ரோல் செய்து இருந்தனர். இப்போது இதே கூட்டணியில் துணிவு படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்போது வலிமை படத்தைப் பற்றி சில விஷயங்களை வினோத் பகிர்ந்துள்ளார். அதாவது வலிமை படத்தில் நடிக்க எந்த ஹீரோவும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அஜித் இந்த படத்தில் முன் வந்து நடித்தார். அதாவது சமீபகாலமாக ரசிகர்களுக்கு என்கவுண்டர் மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு புல்லட் சத்தம் கேட்டால் திரையரங்குகளில் கைதட்டல் பறக்கிறது.

வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் மக்கள் அஜித் மீது பூக்களை போடுவார்கள். இதன் காரணம் ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை பலவந்தப்படுத்திய வழக்கில் மூன்று, நான்கு பெயரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்று விட்டனர். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து தான் இது தவறான என்கவுண்டர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சாதாரணமான அப்பாவிகளை சுட்டுக் கொண்டுள்ளனர். இப்படி பல வழக்குகளில் நிறைய அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக என்கவுண்டருக்கு சப்போர்ட் செய்தால் நாளை ரோட்டில் செல்லக்கூடிய யாராக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

மேலும் ஹைதராபாத்தில் அந்த நான்கு பேரை சுட்டுக் கொன்றதால் அப்போது மக்கள் போலீசாரை பூ போட்டு வாழ்த்தினார்கள். அதனால் தான் வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் யாருக்கு மக்கள் பூ போட வேண்டும் என்பதை தெரிய வைக்க வேண்டும் என எடுக்கப்பட்டது. இதுபோல நூற்றுக்கணக்கான விஷயங்கள் வலிமை படத்தில் உள்ளது.

அதைப் பற்றி கவனிக்கவோ, பேசவோ இங்கு யாரும் இல்லை என்பதுஸதான் என்னுடைய வருத்தம் என வினோத் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவ்வாறு ஒவ்வொரு விஷயங்களாக ஆராய்ந்து வலிமை படத்தை வினோத் செதுக்கியுள்ளார். ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட தவறிவிட்டனர்.