அஜித் பற்றி உண்மையை போட்டு உடைத்த ஹெச்.வினோத்.. கல்யாண் மாஸ்டருக்கு ஆச்சரியத்தை கொடுத்த AK

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் இப்பொழுது திரையரங்கில் வெளியாகி வசூலில் வேட்டையாடி வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு காரணமே படக்குழுவினர் அஜித்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியதே காரணம்.

அது மட்டுமின்றி அஜித் ஒவ்வொரு காட்சியிலும் எப்படி காட்ட வேண்டும் என்று இயக்குனர் விருப்பம் மட்டும் அல்லாமல் அஜித்தின் விருப்பத்தையும் கேட்டு காட்சிகளை அமைத்தனர். இதன் வெளிப்பாடு தான் பாடல் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் அஜித் ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்கு இடையே பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது.

அஜித்தின் நடனம் பல படங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதை மனதில் வைத்துக் கொண்டு அதை முறியடிக்கும் வகையில் தனது நடனத்தில் முழு திறமையும் வெளிக்காட்டும் வகையில் மைக்கில் ஜாக்சன் பாணியில் ஆடி இருப்பார். இவர் பெரிய அளவில் நடனமாட மாட்டார் என்று நினைத்து சாதாரண ஸ்டெப்ஸ் அஜித்திற்கு கல்யாண் மாஸ்டர் ஆட சொல்லி இருக்கிறார்.

ஆனால் அஜித் தனக்கு மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை கல்யாண் மாஸ்டருக்கு ஏற்படுத்தியது. இந்த நடனத்தை கல்யாண் மாஸ்டர் உதவியோடு அஜித் தனது முழு முயற்சியுடன் இறங்கி ஆடி உள்ளார்.

படம் வெளிவந்த முதல் நாளிலிருந்து ரசிகர்கள் அனைவருமே இந்த மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் பெரிய அளவில் பேசினார்கள். இதற்குக் காரணம் அஜித்தின் முழுமையான ஈடுபாடு இந்த நடனத்திற்கு கொடுத்ததே ஆகும். இவர் டான்ஸ்க்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று சொன்னவர்கள் இப்போது வாயடைத்து போனார்கள்.

இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களில் வினோத் பேட்டி அளித்து வருகிறார். மேலும் தனது அனைத்து பேட்டிகளிலும் அஜித்தின் மைக்கேல் ஜாக்சன் நடனத்தை மிகப் பெருமையாக பேசி வருகிறார். இந்த நடனம் உருவாக முழுக்க முழுக்க அஜித்தான் காரணம் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.