சாமியை விட்டுட்டு பூசாரிக்கு H வினோத் அடித்த மணி.. ஜருராக ரஜினி வீட்டில் நடந்த தில்லாலங்கடி தீபாரணை

ஜனநாயகன் படத்தின் ஊட்டி செட்யூல்களையெல்லாம் வஞ்சனை இல்லாமல் முடித்துவிட்டு H வினோத் பிரேக்கில் இருக்கிறார். ஏற்கனவே விஜய், போர்ஷனை எல்லாம் முடித்துவிட்டு அவருக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டார். அவர் இல்லாமல் மற்ற ஆர்டிஸ்ட் காம்பினேஷன் தற்போது போய்க்கொண்டிருக்கிறது.

இப்பொழுது ரெஸ்ட்டில் இருக்கும் H வினோத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் ஏன் இந்த சந்திப்பு என பல பேர் அதிர்ச்சியில் இருந்தனர் ஆனால் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக தெரிகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு பின்னர் இந்த கூட்டணி இணைய போகிறது.

H வினோத், ரஜினி மற்றும் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அவர் சொல்லிய அந்த ஒன்லைன் ஸ்டோரி சௌந்தர்யாவை கவர்ந்து விட்டதாம். இதனால் அதை டெவலப் பண்ண சொல்லி இருக்கிறார்கள். ஜனநாயகன் படத்தை முடித்துவிட்டு வினோத் அதில் இறங்க உள்ளார்.

ரஜினி தற்சமயம் இளம் இயக்குனர்களுடன் டிராவல் செய்து வருகிறார். ஏற்கனவே விஜய்யை இயக்கிய இயக்குனர்கள் எல்லோரும் ரஜினியையும் இயக்கி விடுகிறார்கள். இதற்கு சரியான எடுத்துக்காட்டு லோகேஷ் கனகராஜ் தான். விஜய்யை வைத்து படங்கள் இயக்கிய பிறகு அவர் இப்பொழுது ரஜினியின் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அதை போல் ஜனநாயகன் படத்தை இயக்கி வரும் H வினோத்
இப்பொழுது ரஜினியையும் இயக்கப் போகிறார். வினோத்தை போலவே வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் ஸ் யு அருண்குமாரும், ரஜினியை சந்தித்துள்ளார். அவரிடமும் ரஜினி கதை கேட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து நெல்சன், லோகேஷ், வினோத் என இளம் இயக்குனர்களுடன் டிராவல் செய்யப் போகிறார் தலைவர்.