தாராள பிரபுவுக்கு திருமணம்.. வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இந்நிகழ்ச்சியின் மூலம் ஹரிஷ் கல்யாண் ஏராளமான பெண் ரசிகர்களை பெற்றார். இந்த சூழலில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற பல படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ரைசாவுடன் ஹரிஷ் கல்யாண் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்பு இரண்டு, மூன்று படங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து பிரியா பவானி ஷங்கரை ஹரிஷ் கல்யாண் காதலிப்பதாக கூறப்பட்டது.

ஏனென்றால் இவர்கள் ஜோடியாக நடித்த ஓ மணப்பெண்ணே படம் வெளியாகும் போது ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் உடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஹார்டின் எமோஜிஸ் போட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசி இருந்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹரிஷ் கல்யாண் ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை துவங்க உள்ள செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களின் ஆசீர்வாதத்துடன் நர்மதா உதயகுமார் உடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி என ஹரிஷ் கல்யாண் தனது காதலின் நிர்மலா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது நிர்மலா ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஹரிஷ் கல்யாண் மற்றும் நிர்மலா பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஹரிஷ் கல்யாண் விரைவில் வெளியிட உள்ளார். இப்போது ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Harish-Kalyan-Nirmala-Udhayakumar